Small Introduction

Collectiva Personal Software

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் நம்முடைய பணத்தை சரியாக கையாள கடமைப்பட்டு இருக்கிறோம். பெரும்பாலானோர் தாமாகவோ அல்லது எங்காவது எழுதி வைப்பதன் மூலமோ பணத்தை கையாளுகின்றனர். ஆனால் இந்த முறையானது நமக்கு எல்லா நேரங்களிலும் பயன்படவில்லை என்பது நம் அனுபவ உண்மையே. ஆகவே ஏன் நீங்கள் ஒரு நிதி சார்ந்த கருவியை பயன்படுத்தக் கூடாது?.

அது உங்கள் நேரத்தை சேமிக்கும், வாழ்க்கை கடைசி வரை அனைத்துத் தரவுகளையும் பத்திரமாக வைத்திருக்கும், சரியான கணக்கை காட்டும், எந்த மாதம், எந்த வருடம் வேண்டுமோ அனைத்தையும் பார்க்க உதவும்.

இது போன்ற சிறப்புகள் வாய்ந்த நமது கருவியான Collectiva Personal-ஐப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் தேவையைப் பூர்த்திசெய்யும். உங்கள் பண வரவு, செலவுகளை எளிமையாக கண்காணிக்க மிகவும் பயனள்ளதாக இருக்கும். மேலும் உங்கள் பணம் எங்கு அதிகமாக செலவாகிறது என்பதையும் கண்டறிய உதவும். ஒருமுறை அதை நீங்கள் கண்டுபிடித்து சரி செய்துவிட்டால், தேவையற்ற செலவுகளை நிறுத்தி நிறைய சேமிக்கலாம் என்பதை உணர்வீர்கள்.

General Entry Screen Architecture

  • Data Entry Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database -இல் சேமிக்க பயன்படும் ஒரு Screen ஆகும்.
  • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Entry Screen களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
  • மேலும் Master Entry Screen என்பது நாம் திரும்ப திரும்ப பயன்படுத்தும் Data-வினை இதில் சேமித்துவிட்டு தேவைகேற்ப நாம் Entry Screen-இல் பயன்படுத்திக் கொள்ளல்லாம்.
  • Data Entry Screen என்பது நமது தினசரி பரிவர்த்தனைகளை சேமிக்க பயன்படுகிறது.
  • நமது Data Entry Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

ஏதேனும் புதிய பரிவர்த்தனையை உள்ளிடுவதற்கு நாம் "New" எனும் பட்டனை Click செய்ய வேண்டும். அந்த Screen-இன் தேவைகேற்ப சில Field-கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதை உள்ளீடு செய்து சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

2.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் ஏதேனும் மாற்றம் செய்ய நேரிட்டால் நாம் "Edit" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தேவைகேற்ப மாறுதல்கள் செய்து கொள்ளலாம், மேலும் அதை சேமிக்க "Save" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும்.

3.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவலில் தவறு ஏதேனும் இருப்பின் அல்லது அந்த தகவலானது தேவையில்லை எனில் அதை நீக்க நாம் "Delete" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் அநத குறிப்பிட்ட தகவலானது Database-இல் இருந்தும் நீக்கப்படும்.

4.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களில் குறிப்பிட்ட தகவலை வைத்து ஏதேனும் கண்டறிய விரும்பினால் நாம் "Filter" Icon-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் "Filter Bar" enable ஆகும், அதில் நமது தேவைகேற்ப தகவலை Filter செய்து கொள்ளலாம்.

5.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை நாம் "Excel"-க்கு நம்மால் Export செய்ய இயலும்.

6.

மேலே குறிப்பிட்டதுபோல் "Filter" Icon-ஐ Click செய்தவுடன் "Filter Bar" ஆனது enable ஆகிறது.

7.

நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல்களை காட்டும் பட்டியலே இது. இந்த பட்டியலில் குறிப்பிட்ட தகவலை இருமுறை Click செய்வதன் மூலமும் நாம் தகவலை "Edit" செய்ய இயலும்.

8.

பட்டியலிலுள்ள தகவலானது எத்தனை பக்கத்திற்கு உள்ளதென்பதை தெரிவிக்கும். ஒரு பக்கத்திற்கு 100 தகவல்கள் வீதம் காட்டும்.

9.

பட்டியலிலுள்ள தகவல்களில் எந்த ஒன்றை நாம் தேர்வு செய்கிறோம் என்பதை காண்பிக்கும்.

10.

ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தகவல் போன்று புதிய தகவலானது தேவைப்படுகிறதெனில் நாம் "Copy" எனும் Button-ஐ Click செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் புதிய தகவலை சிறு மாறுதல்களுடன் குறுகிய நேரத்தில் சேமிக்க இயலும்

11.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Exit" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

General Report Screen Architecture

  • Report Screen என்பது நாம் உள்ளிடும் தகவல்களை Database-இல் இருந்து எடுத்து நமது தேவைகேற்ப அறிக்கையை உருவாக்குவதாகும்.
  • நம்முடைய Billing Software-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Report Screen-களும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டாலும், அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியான செயல்களையே செய்கிறது.
  • நமது Report Screen பற்றிய அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clients
1.

நமது கணினியில் ஏற்கனவே Install செய்துள்ள Printer-களானது இதில் காண்பிக்கப்படும் . தேவைகேற்ப Printer-ஐ தேர்வு செய்துக்கொள்ள முடியும்.

2.

அது "Dot Matrix" வகை Printer ஆக இருப்பின் நாம் அதை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.

3.

Preview Button-ஐ Click செய்வதன் மூலம் தகவலானது கீழே உள்ள பட்டியலில் காண்பிக்கப்படுகிறது.

4.

அந்த தகவலை Print செய்ய வேண்டுமெனில் "Print" Button-ஐ Click செய்ய வேண்டும்.

5.

மேலே குறிப்பிட்டது போல் "Preview" Button-ஐ Click செய்வதன் மூலம், தகவல்கள் இருப்பின் அதில் காண்பிக்கப்படும்.

6.

அந்த Screen-ஐ விட்டு வெளியேறு வேண்டுமெனில் நாம் "Cancel" Button-ஐ Click செய்ய வேண்டும் அல்லது மேல உள்ள X-ஐ Click செய்வதன் மூலமும் நாம் அந்த Screen-லிருந்து வெளியேற முடியும்.

Account Master Entries

A/C Ledger

Clients
  • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் இதர Ledger-களை உருவாக்கலாம். அடிப்படை Ledger-காளனது Collectiva GST Billing Software உடன் வரும்.
  • அடிப்படை Ledger-களை நாம் மாற்றவோ நீக்கவோ முடியாது.

Supplier

Clients
  • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் Supplier-களின் தரவுகளை Create செய்யலாம்.
  • இங்கு Create செய்யப்படும் Supplier தரவானது Purchase Order-ல் வரும். அதன் மூலமே நாம் Purchase Order Create செய்கிறோம்.
  • இதில் நாம் Supplier உடைய GST & Aadhar Number-ஐ சேமிக்கலாம்.
  • அவருக்கென்று பிரத்யேக குறியீடு இருப்பின் அதை நாம் Ledger No-ல் சேமிக்கலாம்.
  • அவர் GST வரம்பிற்குள் வருவார் எனில் நாம் Tax Mode-ல் தேர்வு செய்யலாம்.

Customer

Clients
  • இந்த Master Entry Screen-ஐ பயன்படுத்தி நாம் Customer-களின் தரவுகளை Create செய்யலாம்.
  • இங்கு Create செய்யப்படும் Customer தரவானது Sales Order-ல் வரும். அதன் மூலமே நாம் Sales Order Create செய்கிறோம்.
  • இதில் நாம் Customer உடைய GST & Aadhar Number-ஐ சேமிக்கலாம்.
  • அவருகென்று பிரத்யேக குறியீடு இருப்பின் அதை நாம் Ledger No-இல் சேமிக்கலாம்.
  • அவர் GST வரம்பிற்குள் வருவார் எனில் நாம் Tax Mode-இல் தேர்வு செய்யலாம்.
  • அவரை நாம் Line wise ஆகவும் பராமரிக்க இயலும். இதன் மூலம் நம்முடைய முகவரை பயன்படுத்தி பணம் வசூலிக்க இயலும்.
  • நாம் Costing முறையை பயன்படுத்தி அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை தர இயலும்.
  • நாம் Day Of Line-இல் தேர்வு செய்வதன் மூலம் நம்முடைய முகவரை அன்றைய தினத்தில் பணம் வசூலிக்க அனுப்ப ஏதுவாக இருக்கும்.
  • இதில் சேமிக்கப்படும் Billing மற்றும் Delivery Address ஆனது Invoice-இல் Display செய்யப்படும்.

Asset Products

Clients
  • இந்த Master Entry Screen-ஆனது நாம் சொந்தமாக வாங்கும் பொருட்களின் பெயரை உருவாக்க உதவுகிறது.
  • இதில் சில அடிப்படை தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை தகவல்களானது System Defined ஆகும், ஆதலால் அதனை நீக்க இயலாது.
  • வேண்டுமெனில் ஏதேனும் புதிய பொருட்களின் பெயரைகளை புதியதாக உருவாக்கிக் கொள்ளலாம்.

HSN / SAC Code

Clients
  • இன்றையதினத்தில் எந்த ஒரு பொருளையும் நாம் GST போடாமல் விற்பனை அல்லது வாங்க இயலாது.
  • ஒவ்வொரு பொருளும் நாம் புதியதாக Create செய்யும் போது நாம் GST விவரத்தை தேர்வு செய்யவேண்டும்.
  • இதில் நாம் GST, IGST & SGST தகவல்களை சேமிக்கின்றோம்.

A/C Group

Clients
  • இந்த Master Entry Screenஐ பயன்படுத்தி நாம் இதர Groupகளை உருவாக்கலாம். அடிப்படை Groupகாளனது Collectiva GST Billing Software உடன் வரும்.
  • அடிப்படை Groupகளை நாம் மாற்றவோ நீக்கவோ முடியாது.

Unit

Clients
  • இந்த Master Entry Screenஆனது விற்பனை அல்லது கொள்முதல்க்கு உண்டான அளவீடுகளை Create செய்ய உதவுகிறது.

Unit Conversion

Clients
  • இந்த Master Entry Screenஆனது அளவீடுகளை ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றம் செய்ய உதவுகிறது.

Country

Clients
  • -இந்த Master Entry Screenஆனது நாடுகளின் தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Invoiceஇல் பயன்படுகிறது

State

Clients
  • இந்த Master Entry Screenஆனது மாநிலங்களின் தவல்களை சேமிக்க உதவுகிறது. இந்த தகவல் Supplier, Customer & Invoiceஇல் பயன்படுகிறது.

Accounts Entries

Payment

Clients
  • இந்த Payment Entry Screen-ஆனது பண்மாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ நாம் செய்த பரிவர்த்தனைகளை சேமிக்க உதவுகிறது.
  • இதன் மூலம் நாம் செலுத்திய கடந்த மற்றும் நிகழ்கால பரிவர்த்தனைகளை நாம் ஆராய்ந்து பார்க்க இயலும்.
  • Paid By-என்பது எதன் மூலம் நாம் கொடுத்தோம் என்பதைக் குறிக்கிறது, அது பணம் அல்லது வங்கியாக இருக்கலாம்.
  • Paid To-என்பது நாம் யாருக்கு தொகையினை கொடுக்கிறோமோ அவரைக் குறிக்கிறது. அவருடைய பெயரை நாம் A/c Ledger-யில் ஏற்கனவே உருவாக்கி இருக்க வேண்டும்.
  • Paid Amount-என்பது நாம் எவ்வளவு தொகையினை கொடுத்தோம் என்பதைக் குறிக்கிறது.
  • DD/NEFT/RTGS Charge என்பது நாம் செய்த வங்கி பரிவர்த்தனைகளுக்குண்டான கூடுதல் கட்டணத்தைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Receipt

Clients
  • இந்த Receipt Entry Screen-ஆனது பண்மாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ நமக்கு செலுத்திய பரிவர்த்தனைகளை சேமிக்க உதவுகிறது.
  • இதன் மூலம் நமக்கு செலுத்திய கடந்த மற்றும் நிகழ்கால பரிவர்த்தனைகளை நாம் ஆராய்ந்து பார்க்க இயலும்.
  • Received By-என்பது நாம் எதன் மூலம் பெற்றோம் என்பதைக் குறிக்கிறது, அது பணம் அல்லது வங்கியின் மூலமாக இருக்கலாம்.
  • Received From-என்பது நாம் யாரிடம் இருந்து பெற்றோமோ அவரைக் குறிக்கிறது.. அவருடைய பெயரை நாம் A/c Ledger-யில் ஏற்கனவே உருவாக்கி இருக்க வேண்டும்.
  • Received Amount-என்பது நாம் எவ்வளவு தொகையினை பெற்றோம் என்பதைக் குறிக்கிறது.
  • Bank Commission-என்பது வங்கி பரிவர்த்தனைகளுக்கு நாம் செலுத்திய கூடுதல் கட்டணத்தைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Contra

Clients
  • இந்த Contra Entry Screen-ஆனது கீழ்காணும் பரிவர்த்தனைகளை சேமிக்க உதவுகிறது.
  • ஒரு வங்கியிலிருந்து மற்றொறு வங்கிக்கு பணம் அனுப்புதல்.
    • வங்கியில் பணம் செலுத்துதல்.
    • ஒரு Cash A/c-இல் இருந்து மற்றொறு Cash A/c-ற்கு அனுப்புதல்.
    • வங்கியில் இருந்து பணம் எடுத்தல்.
  • From A/c-என்பது எந்த Account-இல் இருந்து எடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது அல்லது அனுப்பப்படுகிறது என்பதை குறிக்கிறது.
  • To A/c-என்பது எந்த Account-ற்கு மாற்றப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.
  • Amount-ஆனது எவ்வளவு பணப்பரிமாற்றம் நடந்தது என்பதைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Journal

Clients
  • இந்த Journal Entry என்பது அனைத்து கணக்கியல் மற்றும் நிதி தரவுகளின் அடித்தளமாகும் மேலும் வணிக பரிவர்த்தனையை சேமித்து வைத்திருக்க உதவுகிறது.
  • பெரும்பாலான நிறுவனங்கள் இரட்டை நுழைவு கணக்கியல் முறையைப் பயன்படுத்துகின்றன, அதாவது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் குறைந்தது இரண்டு Ledger-கள் பதிவு செய்கிறது.
  • ஒரு Ledger-இல் பற்று வைக்கப்படுகிறது, ஒரு Ledger-இல் வரவு வைக்கப்படுகிறது. சரியான Accounting Journal Entry என்பது சமமான பற்று மற்றும் கடன் தொகைகளைக் கொண்டுள்ளது.
  • Debit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Credit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Amount என்பது பரிவர்த்தனைக்குண்டான தொகையினைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Depriciation

Clients
  • Depriciation என்பது ஒரு பயனுள்ள அல்லது சொத்தின் விலையை அதன் பயனுள்ள ஆயுள் அல்லது ஆயுட்காலம் மீது ஒதுக்குவதற்கான ஒரு கணக்கியல் முறையாகும்.
  • Depriciation என்பது ஒரு சொத்தின் மதிப்பு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • சொத்துக்கள் தேய்மானம் செய்வது ஒவ்வொரு ஆண்டும் சொத்து பயன்பாட்டில் இருக்கும் போது அதன் செலவில் ஒரு பகுதியை செலவழிக்கும்போது நிறுவனங்கள் ஒரு சொத்திலிருந்து வருவாய் ஈட்ட உதவுகிறது.
  • தேய்மானத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அது லாபத்தை பெரிதும் பாதிக்கும்.

Opening Balance

Clients
  • இந்த Entry Screen ஆனது ஒவ்வொரு Ledgerனிடைய ஆரம்ப இருப்புகளை உள்ளிட பயன்படுகிறது.
  • நமது Billing Softwareஐ முதன்முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த Entry Screenஇல் அனைத்து Ledgerகளுக்கும் ஆரம்பஇருப்புகளை உள்ளிட வேண்டும்.

Search Voucher

Clients
  • இந்த Search Voucher-ஆனது நாம் சேமித்து வைத்துள்ள தகவல்களிலிருந்து தேடி எடுக்கு உதவுகிறது.
  • Any Year-என்பது நாம் எந்த Accounting Year-இல் தேட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதை நாம் தேர்வு செய்தால் நம் கணினியிலுள்ள அணைத்து Accounting Year-லும் தேடும்.
  • Search Description-என்பது நாம் எந்த வார்த்தையினை பயன்படுத்தி தேடிகிறோம் என்பதைக் குறிக்கிறது.
  • Amount Range-என்பது நமது பரிவர்த்தனைகுண்டான தொகையினைக் குறிக்கிறது.
  • Ledger Group-என்பது நாம் தேடும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகுண்டான Ledger எந்த Group-ற்க்கு கீழ் வருகிறது என்பதைக் குறிக்கிறது.

Credit Note

Clients
  • இந்த Credit Note அல்லது Credit Memo என்பது ஒரு விற்பனையாளர் வாங்குபவருக்கு வழங்கிய வணிக ஆவணம் ஆகும்.
  • இந்த Credit Note விற்பனை வருமான இதழுக்கான மூல ஆவணமாக செயல்படுகின்றன வேறு வார்த்தைகளில் கூறுவதானால், Credit Note விற்பனையை குறைப்பதற்கான சான்றாகும்.
  • Credit Memo, "Credit Memorandum" என்ற வார்த்தையின் சுருக்கம், முந்தைய விலைப்பட்டியலின் விதிமுறைகளின் கீழ் வாங்குபவர் ஒரு விற்பனையாளருக்கு செலுத்த வேண்டிய தொகையை குறைப்பதற்கான சான்றாகும்.
  • Debit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Credit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Amount என்பது பரிவர்த்தனைக்குண்டான தொகையினைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Debit Note

Clients
  • Debit Note அல்லது Debit Memo என்பது ஒரு கடன் குறிப்பை முறையாகக் கோருவதற்கான வழிமுறையாக ஒரு விற்பனையாளருக்கு வாங்குபவர் வழங்கிய வணிக ஆவணமாகும்.
  • கொள்முதல் வருமான இதழுக்கான மூல ஆவணமாக Debit Note செயல்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், செலவினங்களைக் குறைப்பதற்கான சான்றாகும்.
  • ஏற்கனவே வழங்கப்பட்ட விலைப்பட்டியலின் அளவை மேல்நோக்கி சரிசெய்ய விற்பனையாளர் விலைப்பட்டியலுக்கு பதிலாக Debit Note-ஐ வெளியிடலாம்.
  • Debit Note பொதுவாக Business to Businesss பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுகின்றன
  • Debit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Credit A/c-என்பது எந்த Ledger A/c என்பதைக் குறிக்கிறது.
  • Amount என்பது பரிவர்த்தனைக்குண்டான தொகையினைக் குறிக்கிறது.
  • Remarks நாம் எதற்காக இந்த பரிவர்த்தனையை செய்தோம் என்பதை இதில் சேமிப்பதன் மூலம் எதிர்காலக் குறிப்பிற்க்கு உதவும்.

Petty Shop

Clients
  • இந்த Petty Shop Entry-ஆனது பெட்டி கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகள் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு கடணாகக் கொடுத்த தொகையினை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  • மேலும் இன்றைய தேதிவரை அவர்களுக்கு நாம் கடணாகக் கொடுத்த பொருட்களின் தொகை மற்றும் அவர்களிடமிருந்து நாம் பெற்ற தொகையினை பார்க்க முடியும்.
  • மேலும் இதில் நாம் அவர்களுடைய பெயரை எளிமையாக உருவாக்க முடியும்.
  • மேலும் இதில் உள்ள Print Option-ஐ பயன்படுத்தி நாம் அவர்களுடைய பரிவர்த்தனைக்குண்டான தகவல்களை Print செய்து கொடுக்க முடியும்.

Financial Reports

Purchase Day Book

Clients
  • இந்த Report ஆனது கொள்முதல் செய்த பொருட்களின் தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.

Sales Day Book

Clients
  • இந்த Report ஆனது விற்பனை செய்த பொருட்களின் தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.

Ledger Summary

Clients
  • இந்த Report ஆனது அனைத்து Ledgerகளுக்கும் உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
  • இதில் ஆரம்பஇருப்பு, வரவு, செலவு மற்றும் முடிவிருப்பு நாம் பார்க்கலாம்.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Fillter By மற்றும் Summary Byஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • -அவைகள் : A/c Group, Line, Day Of Line.

Ledger Summary Groupwise

Clients
  • இந்த Report ஆனது அனைத்து A/c Groupகளுக்கும் உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
  • இதில் அதற்குண்டான வரவு மற்றும் செலவுகளை நாம் பார்க்கலாம்.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.

Ledger A/c Transaction

Clients
  • இந்த Report ஆனது ஒரு குறிப்பிட்ட Ledgerக்கு உண்டான தரவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.
  • இதில் அதற்குண்டான வரவு மற்றும் செலவுகளை நாம் பார்க்கலாம்.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • இதில் As Onஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாள் வரை நடந்த அனைத்து வரவு செலவு விவரங்களை நாம் பார்க்கலாம்.
  • இதில் For A Periodஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாட்களுக்குட்ப்பட்ட அனைத்து வரவு செலவு விவரங்களை நாம் பார்க்கலாம்.
  • மேலும் Report Type மற்றும் Ledger A/c ஆனது தேர்வு வேண்டியது அவசியமாகும்.

Agewise Out standing

Clients
  • இந்த Report ஆனது 15 நாட்கள் இடைவெளியில் 60 நாட்கள் வரை, 30 நாட்கள் இடைவெளியில் 120 நாட்கள் வரை மற்றும் அதற்க்கு மேற்பட்ட நமக்கு வரவேண்டிய நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Day Based மற்றும் Group Byஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Line, Days, Day Of Line and Customer.

Billwise Out standing

Clients
  • இந்த Report ஆனது ஒவ்வொரு Billர்க்கும் நமக்கு வரவேண்டிய மற்றும் நமக்கு கொடுக்கப்பட்ட தொகையினை அறிய உதவுகிறது.
  • இதில் As Onஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாள் வரை நமக்கு வரவேண்டிய நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
  • இதில் For A Periodஐ தேர்வு செய்யும் போது நாம் எந்த தேதியை தேர்வு செய்கிறோமோ அன்றைய நாட்களுக்குட்ப்பட்ட அனைத்து நிலுவை தொகையினை அறிய உதவுகிறது.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதி, Report Type மற்றும் Group Byஆனது முக்கியமானதாகும்.
  • இதர சில தகவல்கள் நமது தேவைகேற்ப நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அவைகள் : Line and Customer.

Accounting Reports

Trail Balance

Clients
  • இந்த Trial Balance Report ஆனது அனைத்து Ledgerகளின் (வருவாய் மற்றும் மூலதனம்) பொதுப்பட்டியல் ஆகும்.
  • இந்த பொதுப்பட்டியலில் ஒவ்வொரு Ledgerனிடைய பெயர் மற்றும் அதனுடைய இருப்பு நிலையை கொண்டிருக்கும்.
  • அந்த இருப்பு நிலையானது Credit அல்லது Debitஇல் இருக்கும்.

Final Accounts

Clients
  • இந்த Final Accounts Reportஆனது ஒரு வணிகத்தின் லாபம் மற்றும் நிதி நிலை குறித்து அதன் மேலாண்மை, உரிமையாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்கு ஒரு யோசனையை அளிக்க உதவுகிறது.
  • அனைத்து வணிக கணக்குகளும் Ledgerகளுக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டு சீராக பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருட கணக்கியல் முடிவிலும் இது தயார் செய்யப்படுகிறது.
  • இதன் மூலமே வணிகத்தின் நிதிநிலையை தீர்மானிக்கிறது. இதன் கீழ் இலாப நட்ட கணக்கு (Profil & Loss) மற்றும் இருப்புநிலை (Balance Sheet) ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாகும்.
  • மேல்கண்ட இரண்டிருக்குமே நாம் Option கொடுத்திறிக்கிறோம்.

Cash Bank Book

Clients
  • இந்த Report ஆனது நமக்கு பணம் மற்றும் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Day Book

Clients
  • இந்த Report ஆனது அன்றைய தினத்திற்கு உட்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Payment Analysis

Clients
  • இந்த Report ஆனது நாம் பிறர்க்கு கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Receipt Analysis

Clients
  • இந்த Report ஆனது நாமக்கு பிறர் கொடுத்த பரிவர்த்தனைகளை காண வழிவகை செய்கிறது.

Journal Analysis

Clients
  • இந்த Journal Entry என்பது பொருளாதார அல்லது பொருளாதாரமற்ற எந்தவொரு பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருத்தல் அல்லது உருவாக்கும் செயல்.
  • பரிவர்த்தனைகள் ஒரு நிறுவனத்தின் பற்று மற்றும் கடன் நிலுவைகளைக் காட்டும் ஒரு கணக்கியல் பட்டியலாகும்.

Asset

Asset Purchase

Clients
  • Asset Purchase-என்பது நாம் வாங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய தகவல்களை சேமிப்பதாகும்.
  • Supplier-என்பது நாம் யாரிடம் இருந்து வாங்கினோம் எனபதைக் குறிக்கிறது.
  • Invoice-என்பது நாம் வாங்கியதற்க்கு கொடுக்கப்படும் Invoice-ஐக் குறிக்கிறது.
  • Tax Mode-என்பது நாம் வாங்கியதற்க்கு கொடுக்கப்படும் Tax-ஐக் குறிக்கிறது.
  • Product-என்பது நாம் வாங்கிய பொருளை குறிக்கிறது. இது Asset Product Master-இல் இருந்து வருகிறது.
  • Qty-என்பது எத்தனை எண்ணிக்கை என்பதைக் குறிக்கிறது.
  • Rate-என்பது ஒரு பொருளின் விலையைக் குறிக்கிறது.
  • ஏதேனும் Discount மற்றும் Tax இருப்பின் அதனை உள்ளிட வேண்டும்.
  • கூடுதல் கட்டணங்களுக்கு Other Charges-ஐக் Click செய்ய வேண்டும்.
  • இதில் Edit Mode-இல் சென்று அதற்குடைய ஆவணங்களை Upload செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Asset Sales

Clients
  • Asset Sales-என்பது நாம் விற்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய தகவல்களை சேமிப்பதாகும்.
  • Customer-என்பது நாம் யாரிடம் கொடுக்கிறோம் எனபதை குறிக்கிறது.
  • Tax Mode-என்பது நாம் விற்பனை செய்ததற்க்கு கொடுக்கப்படும் Tax-ஐக் குறிக்கிறது.
  • Product-என்பது நாம் விற்பனை செய்யும் பொருளை குறிக்கிறது. இது Asset Product Master-இல் இருந்து வருகிறது.
  • Qty-என்பது எத்தனை எண்ணிக்கை என்பதைக் குறிக்கிறது.
  • Rate-என்பது ஒரு பொருளின் விலையைக் குறிக்கிறது.
  • ஏதேனும் Discount மற்றும் Tax இருப்பின் அதனை உள்ளிட வேண்டும்.
  • கூடுதல் கட்டணங்களுக்கு Other Charges-ஐக் Click செய்ய வேண்டும்.

Asset Opening Stock

Clients
  • இந்த Asset Opening Stock-ஆனது நம்முடைய கையிருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய இன்றைய மதிப்பீடுகளை சேமிக்க உதவுகிறது.
  • Product-என்பது நாம் கையிருப்பிலுள்ள பொருளைக் குறிக்கிறது.
  • Stock Qty-என்பது எத்தனை எண்ணிக்கை என்பதைக் குறிக்கிறது.
  • Purchase Rate-என்பது நாம் வாங்கிய விலையினைக் குறிக்கிறது.
  • Stock Value-என்பது அதனுடைய மதிப்பினைக் குறிக்கிறது.
  • Warranty Date-என்பது அந்த பொருளினுடைய உத்தரவாத தேதியைக் குறிக்கிறது

Asset Purchase Day Book

Clients
  • இந்த Asset Purchase Day Book-என்பது நாம் வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதியானது முக்கியமானதாகும்.
  • Supplier-ஐ நமது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

Asset Sales Day Book

Clients
  • இந்த Asset Sales Day Book-என்பது நாம் விற்பனை செய்த அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதியானது முக்கியமானதாகும்.
  • Supplier-ஐ நமது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

Search Asset Document

Clients
  • இந்த Asset Sales Day Book-என்பது நாம் விற்பனை செய்த அசையும் மற்றும் அசையா சொத்துகளை பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்க்க உதவுகிறது.
  • இந்த Report Screenஇல் சில அடிப்படை தகவல்களை வைத்து Filter செய்து பார்க்க இயலும்.
  • அந்த அடிப்படை தகவல்களானது கீழே கொடுக்க பட்டுள்ளது.
  • இதில் தேதியானது முக்கியமானதாகும்.
  • Supplier-ஐ நமது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

Special Screens

My Experience

Clients
  • இந்த My Experience-ஆனது நம்முடைய அன்றாட நிகழ்வுகளை மற்றும் அனுபவங்களை சேமித்து வைக்க உதுவுகிறது.
  • இதில் ஒரு குறிப்பிட்டத் தேதியினை தேர்வு செய்து நம்முடைய நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை உள்ளிட வேண்டும் மேலும் இது தானாகவே நாம் உள்ளிட்ட தகவலை சேமித்து வைத்துக் கொள்ளும்.
  • மேலும் நாம் இதில் Photos மற்றும் Documents-கள் அல்லது வேறேதேனும் File-களை சேமித்துக் கொள்ள முடியும்.

Opening Balance

Clients
  • இந்த Entry Screen ஆனது ஒவ்வொரு Ledgerனிடைய ஆரம்ப இருப்புகளை உள்ளிட பயன்படுகிறது.
  • நமது Billing Softwareஐ முதன்முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த Entry Screenஇல் அனைத்து Ledgerகளுக்கும் ஆரம்பஇருப்புகளை உள்ளிட வேண்டும்.

A/C Forward

Clients
  • இந்த Screen ஆனது ஒவ்வொரு வருடாந்திர கணக்கு முடியும் பொழுது, புதிய வருடாந்திர கணக்கை ஆரம்பிக்கப்பயன்படுகிறது.
  • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமும்மின்றி நம்முடைய அனைத்து Ledgerகளின் இருப்புகளை புதிய வருடாந்திர கணக்கிற்கு மாற்றயியலும்.
  • இது Ledgerகளின் இருப்புகளை மட்டுமல்லாது பொருட்களின் இருப்பு நிலைகளையும் தானாகவே மாற்றும்.

Back Up

Clients
  • இந்த Screen ஆனது நமது Dataகளை பத்திரமாக Backup எடுக்க உதவுகிறது.
  • மேலும் நம்முடைய Backup எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமென்பதையும் நம்மால் Configure செய்ய முடியும்.
  • மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட Companyகள் இருப்பின் எதை வேண்டுமோ அதை மட்டும் நம்மால் BackUp எடுக்க இயலும்.

Change Financial Year

Clients
  • இந்த Screen ஆனது ஒரு நிதியாண்டிலிருந்து மற்றொரு நிதியாண்டிற்கு மாற்ற ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் நாம் எந்த ஒரு சிரமமும்மின்றி எந்தவொரு நிதியாண்டிற்கு மாற்றயியலும்.

Setting DB Path

Clients
  • இந்த Screen ஆனது நம்முடைய Dataவானது கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை நம்மால் சுலபமாக தேர்வு செய்ய இயலும்.
  • நாம் கணினியில் மட்டுமல்லாது Pendrive அல்லது External Drive அல்லது Shared Driveஇல் கூட சேமிக்க இயலும்.

Auto Update

Clients
  • நமது Billing Softwareஇல் ஏதேனும் மாறுதல்கள் செய்திருப்பின் நாமாகவே அதை Update செய்துக்கொள்ள இது உதவுகிறது.
  • இதன் மூலம் Userகள் எந்த ஒரு புதிய சேவையையும் இழக்க நேரிடாது.

Settings

Clients
  • இந்த Screen ஆனது நமது Billing Software சமந்தப்பட்ட அனைத்து Optionகளையும் Configure செய்துக்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Contact Us

Our Headquarters

Soft Hands Software Services,
No.12, 2nd Floor, Trichy Main Road, Dadagapatty Gate,
Salem-636006, Tamilnadu, India.

Speak to Us(+91)850 850 2000 (+91)850 860 2000

E-Mail :support@shss.co.in

Follow on youtubeMore than 3 lakhs Students